News January 11, 2025
இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். திமுகவினர் ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒருவேளை தேமுதிக போட்டியிட்டால், அதிமுக ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 16, 2026
திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும்: EPS

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் மூலம் திமுகவுக்கு காங்., கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., கை நழுவி வெளியே போகப் போகிறது என்றும், இதனால், இண்டியா கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் EPS கூறியுள்ளார். மேலும், திமுகவை எப்பொழுது ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
News January 16, 2026
BREAKING: இன்று கிடையாது.. தமிழக அரசு அறிவித்தது

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், அனைத்து மதுபானக் கடைகளில் சில்லறை விற்பனை, அதனுடன் இணைந்த பார்களில் விற்பனை நடைபெறாது. அதனை மீறி விற்பனை நடந்தாலோ, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 16, 2026
அண்ணாமலையை நீக்கியது அமித்ஷாவின் உத்தி: குருமூர்த்தி

கட்சி பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டது பாஜகவும், அண்ணாமலையும் சேர்ந்து எடுத்த முடிவு என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில், அமித்ஷா எடுத்த உத்திதான் அது என்றும், உத்திகளை தயார் செய்வதில் அமித்ஷா திறமைசாலி எனவும் குருமூர்த்தி கூறியுள்ளார். மேலும், மகாராஷ்டிராவை போல அமித்ஷா தற்போது TN-ஐ கையில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


