News May 27, 2024

பாஜகவுக்கு இனி அதிமுக ஆதரவில்லை?

image

தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஜுன் 4இல் தேர்தல் முடிவு வந்த பிறகு பாஜக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு அளிக்குமா எனக் கேள்வியெழுந்துள்ளது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவு அளித்தால், கூடவே இருந்து அழித்துவிடும், தமிழகத்திலும் செல்வாக்கு குறைந்துவிடும் என இபிஎஸ் கருதுவதால், ஆதலால் பாஜகவை ஆதரிப்பதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 4, 2026

தவெகவில் அந்த நடிகையா?

image

விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் எனக்கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், விவாகரத்துக்கு முக்கிய புள்ளியாக இருந்த அந்த நடிகையை தவெகவில் இணைத்தால் கட்சிக்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும், தேர்தல் நேர பிரசாரத்துக்கும் உதவும் என விஜய் திட்டமிட்டதாக வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது தவறான செய்தி என்று தவெகவினர் கமெண்ட் செய்கின்றனர்.

News March 4, 2026

20 நாளில் வங்கிக் கணக்கில் ₹9000… TN அரசு இன்ப செய்தி

image

பிப்., மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000+ கோடைகால சிறப்பு நிதி ₹2000 என மொத்தம் ₹5000 கடந்த பிப்.13-ல் வரவு வைக்கப்பட்டது. நேற்று முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200+ கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3200, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500+ ₹2000 என மொத்தம் ₹3500, மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு ₹4000 என 20 நாளில் ஏறக்குறைய <<19286458>>₹8,200 – ₹9000<<>> வரை TN அரசு வழங்கியுள்ளது.

News March 4, 2026

காங்கிரஸை உடைக்க ஸ்கெட்ச் போடுகிறதா திமுக?

image

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் இன்னும் காங்., திமுக கூட்டணி உறுதியாகவில்லை. ஒருவேளை இந்த கூட்டணி அமையாவிட்டால், திமுக கூட்டணியை விரும்பும் காங்கிரஸாரை ஒன்று சேர்த்து, 1996 தேர்தல் போல அக்கட்சியை உடைக்க திமுக திட்டமிட்டு வருவதாக ராகுலுக்கு தகவல் சென்றுள்ளதாம். இதனால்தான் ஸ்டாலினை, சகோதரர் என குறிப்பிடாமல், ராகுல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.

error: Content is protected !!