News March 28, 2025
பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 3 அமைச்சர்கள் இன்று பதிலுரை வழங்கவிருப்பதால் இபிஎஸ்ஸை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனாலும், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 10, 2025
PM மோடி பதவி விலக வேண்டும்: சித்தராமையா

வாக்கு திருட்டு நிரூபணமானதால் PM மோடி பதவி விலக வேண்டுமென CM சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் அண்மையில் குற்றம் சுமத்தினார். இந்நிலையில் வாக்கு திருட்டை கண்டித்து காங்., சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய சித்தராமையா, குறைந்தது 14 தொகுதிகளாவது வென்றிருக்க வேண்டிய காங்., வாக்குத் திருட்டால் தோல்வியடைந்ததாக கூறினார்.
News August 10, 2025
கணவன் – மனைவி உறவை பாதிக்கும் 5 விஷயங்கள்

தாம்பத்ய வாழ்க்கையை பின்வரும் விஷயங்கள் பாதிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்: *வேலை, பிசினஸ், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தீவிர மனஅழுத்தம், பாலியல் நாட்டத்தை பாதிக்கும் *போதுமான தூக்கம் இல்லாதது உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்கும் *ஹார்மோன்கள் சமநிலை பாதித்தல் *தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுதல் *உறவில் திருப்தி ஏற்படாத நிலை போன்றவையும் தாம்பத்ய உறவை பாதிக்கலாம். உங்கள் கருத்து?
News August 10, 2025
ராசி பலன்கள் (10.08.2025)

➤ மேஷம் – ஆக்கம் ➤ ரிஷபம் – அச்சம் ➤ மிதுனம் – ஓய்வு ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – பிரீதி ➤ கன்னி – தனம் ➤ துலாம் – நலம் ➤ விருச்சிகம் – வெற்றி ➤ தனுசு – போட்டி ➤ மகரம் – தெளிவு ➤ கும்பம் – ஊக்கம் ➤ மீனம் – லாபம்.