News March 16, 2025

மீண்டும் அதிமுக இணைப்பு: அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்

image

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்நிலையில், அதிமுக மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெ.,வுடன் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர் செங்கோட்டையன். ஈகோவை விட்டுக்கொடுத்து விட்டு, பிரிந்து கிடைக்கும் அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News July 9, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்துப் பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஜூலை 9, 2025 அன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டங்களில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வெளியிடப்பட்ட புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 9, 2025

நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நிலை கவலைக்கிடம்

image

நடிகர் ஃபிஷ் வெங்கட்டின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார். இதுவரை சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு அவர் மாற்றப்பட்டு இருப்பதாகவும், நன்கொடையாளர்கள் தரும் பணத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உடல்பாகம் முழுவதும் ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News July 9, 2025

முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் சரிவு

image

முட்டை விலை இன்று ஒரே நாளில் 20 காசுகள் வீழ்ச்சியடைந்திருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1 முட்டையின் விலை நேற்று ₹5.75ஆக இருந்தது. இந்நிலையில் இன்று அதன் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ₹5.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ₹6-க்கு விற்கப்பட்டு வருகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே பதிவிடுங்க.

error: Content is protected !!