News February 10, 2025

அதிமுகவினர் உதயசூரியனுக்கு ஓட்டு: ரகுபதி

image

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக விசுவாசிகளின் ஓட்டுகள் கூட திமுகவின் உதய சூரியனுக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பின்னர், அதிமுக சந்திக்கும் 11வது தோல்வி இது என விமர்சித்த அவர், முன்னாள் அமைச்சர்களின் பேச்சு மூலம் அதிமுக தற்போது இபிஎஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிகிறது. இதனால், அவருக்கு மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளதாக சாடினார்.

Similar News

News March 5, 2026

மகளிர் உரிமைத் தொகை.. மேலும் 2 மகிழ்ச்சி செய்தி

image

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், முதல் அறிவிப்பாக இது குறித்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பம் எப்போது விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

News March 5, 2026

விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

image

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 5, 2026

2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

image

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

error: Content is protected !!