News December 19, 2024
அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை: உதயநிதி ஸ்டாலின்

அரசியலமைப்புக்கு எதிராக பேசிய நீதிபதியை பதவியை விட்டு நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் துணிச்சல் கூட அதிமுகவுக்கு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவையில் நிகழ்வொன்றில் பேசிய அவர், “பாஜக கொண்ட வந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கும் அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட அதிமுகவை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புவது எனக்கு கவலை அளிக்கிறது” என்றார்.
Similar News
News September 6, 2025
வழிபாட்டிடங்களில் தேசிய சின்னம் ஏன்? ஒமர் கேள்வி

காஷ்மீரில் ஹஸ்ரத்பால் தர்காவில் தேசிய சின்னம் <<17633216>>சேதப்படுத்தப்பட்டது<<>> பெரும் சர்ச்சையானது. இதுபற்றி பேசிய காஷ்மீர் CM ஒமர் அப்துல்லா, எந்தவொரு மதவிழாவிலும் தேசிய சின்னம் வைப்பதை நான் பார்த்ததில்லை. இங்கு அதை வைக்கவேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், மசூதிகள், தர்காக்கள், கோயில்கள், குருத்வாராக்கள் ஆகியவை மதவழிபாட்டிடங்கள். தேசிய சின்னங்கள் அங்கு பயன்படுத்தப்படுவதில்லை என்றார்.
News September 6, 2025
இது Old Monk-இன் கதை

ஐரோப்பிய துறவிகளால்(Monk) இன்ஸ்பையராகி 1954-ல் வேத் ரத்தன், ஓல்ட் மாங்க்-ஐ தொடங்கினார். சீக்ரெட் ஸ்பைசஸ் கலந்து 7 ஆண்டுகள் ஓக் மரப் பீப்பாயில் ஊறவைத்த டார்க் ரம், மதுபிரியர்களை ரொம்பவே கவர்ந்தது. 1970-ல் ரத்தன் மறைந்துவிட, சகோதரர் பிரிகேடியர் கபில் மோகன் பொறுப்பேற்றார். அதன்பின் விளம்பரம் இல்லாமலேயே பிரபலமான ஓல்ட் மாங்க், இன்று 22 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் பிரபல பிராண்டாக உள்ளது.
News September 6, 2025
தீபாவளிக்கு டபுள் போனஸ்.. அரசின் இன்ப அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA(அகவிலைப்படி) உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியையொட்டி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி DA வழங்கப்படும் என ஏற்கெனவே மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஜூலை மாதத்தில் இருந்து 3% உயர்வை கணக்கிட்டு அக்டோபர் சம்பளத்தில் 3 மாத DA நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.