News March 17, 2024

கூட்டணி அமைக்க முடியாமல் திணறும் அதிமுக

image

கூட்டணி அமைப்பதில் அதிமுக திணறி வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை, கூட்டணி அமைத்து முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்குவார். ஆனால் தற்போது இபிஎஸ் தரப்புக்கும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கும் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு 3 நாளே உள்ளதால், இது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 3, 2025

திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

image

ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திமுக அரசு திட்டமிட்டு இழிவுபடுத்திவிட்டதாக சீமான் சாடியுள்ளார். திமுக அரசு தொடர்ச்சியாக தமிழின முன்னோர்கள், தலைவர்களை உண்மைக்குப் புறம்பான அவதூறு பொய்ப்பரப்புரைகள் மூலம் அவமதித்து வருவதாக X தள பதிவில் சீமான் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்பதோடு, கேள்வியை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News September 3, 2025

+2 மாணவர்கள் இனி அலைய வேண்டாம்!

image

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. வெகு தூரத்தில் உள்ள மையங்களுக்கு செல்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே தேர்வுக்காக 10 கி.மீ-க்கு மேல் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அருகிலேயே மையங்கள் அமைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை அறிக்கையை அலுவலர்கள் செப்.15க்குள் தேர்வுத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

News September 3, 2025

கொலை மிரட்டல்: நடிகர் ‘சித்தப்பா’ சரவணன் சிக்கினார்

image

ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி சூர்யா ஸ்ரீ புகார் அளித்துள்ளார். அதில், 2-வது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து, அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வீடியோ ஆதாரத்துடன் சூர்யா ஸ்ரீ மனு அளித்துள்ளார். இதுகுறித்து சரவணனிடம் போலீஸ் விசாரிக்க உள்ளது. இருவரும் விவாகரத்து கோரிய வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

error: Content is protected !!