News September 26, 2025

₹1,000 உரிமைதொகை கிடைக்க அதிமுகவே காரணம்: EPS

image

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என CM ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய் என EPS சாடியுள்ளார். அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைதொகை ₹1,000-ஐ திமுக அரசு கொடுப்பதாகவும், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால், அனைவருக்கும் மகளிர் உரிமைதொகை என கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், கோர்ட் உத்தரவால் 1.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 9, 2026

இந்த நேரத்தில் தண்ணீர் கட்டாயம் குடிங்க!

image

சில நேரங்களில் நாம் ஏனோ தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறோம். அப்படி இருப்பது உடல் இயக்க செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடிக்கவும் *சாப்பிட தொடங்கும் 10 நிமிடத்திற்கு முன்னால் தண்ணீர் குடியுங்கள் *இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது *இதனால், உடல் உறுப்புகள் சீராக இயங்கும்.

News January 9, 2026

பொங்கல் சிறப்பு பஸ்கள் முன்பதிவு தொடங்கியது

image

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 22,792 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜன.9 – ஜன.14 வரை சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக TNSTC வெப் (அ) செயலியில் டிக்கெட் புக் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

தேர்தலுக்காக ₹3,000 வழங்கப்படுகிறது: தமிழிசை

image

பொங்கல் தொகுப்பு வழங்குவதில் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தமிழிசை சாடியுள்ளார். வங்கிக்கணக்கில் நேரடியாக ₹3,000 செலுத்துவதை விடுத்து, வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிக்கு MP, MLA, கவுன்சிலர் வரும்வரை மக்களை நிற்கவைத்து, கஷ்டப்படுத்தி பணத்தை திமுகவினர் கொடுப்பதாக கூறினார். மேலும், இது பொங்கலுக்காக வழங்கப்படும் பணமல்ல, தேர்தலுக்கானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!