News April 10, 2025

இலவு காத்த கிளி அதிமுக: திருமா கிண்டல்

image

BJP-யின் தயவுக்காக மக்களின் ஆதரவை இழக்க ADMK தயாராகிவிட்டதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். DMK கூட்டணி கட்சிகள் வெளியே வரும் என இலவு காத்த கிளி போல் காத்திருந்து, அது நடக்காத விரக்தியில் ADMK பேசுவதாகவும், நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதை தவிர ஆளுங்கட்சியால் வேறு என்ன செய்ய முடியும் என்பதை ADMK விளக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News April 18, 2025

இன்று உலக பாரம்பரிய தினம்

image

உலக பாரம்பரிய தினம் (ஏப்.18) என்பது நமது கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. இந்த நாள் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களின் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில், மகாபலிபுரம் கோயில், தாஜ்மஹால், அஜந்தா குகைகள், கோனார்க் சூரியக் கோயில் போன்ற அற்புதமான வரலாற்று நினைவுச்சின்னங்களை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது

News April 18, 2025

இன்று அனல் பறக்கபோகும் RCB – PBKS போட்டி

image

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB – PBKS இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் RCB-க்கு சொந்தமானது என்பதால், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், PBKS வலுவாக இருப்பதால், சூழல் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம்.

News April 18, 2025

வரலாற்றில் இன்று!

image

➤1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
➤2021 – கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியது
➤1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவுநாள்
➤சிம்பாப்வேயில் விடுதலை நாள்
➤உலக பாரம்பரிய தினம்

error: Content is protected !!