News April 10, 2024
அதிமுகவுக்கு அழகு முத்துக்கோன் பேரவை ஆதரவு

அழகு முத்துக்கோன் பேரவையின் நிறுவனத் தலைவர் K.P.வேல்ராஜ் தலைமையில், அப்பேரவையின் மாநில நிர்வாகிகள் இபிஎஸ்சை நேரில் சந்தித்து, அதிமுகவுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். அதற்கு, இபிஎஸ் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். திமுகவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருப்பதால், யாதவ் சமூக மக்கள் வாக்கு, I.N.D.I.A கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
விமானத்தின் ஒரு பகுதியை நிலவுக்கு அனுப்பும் நாசா

நாசா, ஆர்டெமிஸ்-II திட்டத்தில் ரைட் சகோதரர்களின் விமானத்தின் ஒரு பகுதியை நிலவுக்கு அனுப்ப உள்ளது. அப்பல்லோ திட்டத்திற்கு பிறகு முதல் ஆளில்லா நிலவுப் பயணமான ஆர்டெமிஸ் II-ல், கனவை நிஜமாக்கிய ரைட் சகோதரர்கள் விமானத்தின் வரலாற்றை நிலவுக்கு சுமந்து செல்ல முடிவெடுத்துள்ளது. இதற்காக விமானத்தின் இறக்கையிலிருந்து எடுக்கப்பட்ட துணியை அனுப்புகிறது. ஆர்டெமிஸ்-II அடுத்த மாதம் விண்ணில் செல்ல உள்ளது.
News January 27, 2026
BREAKING: தேர்தல்.. ஸ்டாலின் புதிய அறிவிப்பு

காங்., கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் குறித்து திமுக நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படவும், கூட்டணி தொடர்பான முடிவுகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
Voter List-ல் பெயர் சேர்க்க 15,74,351 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15,74,351 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 96,732 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் SIR மூலம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜன.30-ம் தேதி முடிவடைவதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


