News February 14, 2025
இபிஎஸ் இல்லாத அதிமுக தயாராகிறது: டிடிவி தினகரன்

2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக தயாராகி வருவதாக டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MGR, ஜெயலலிதாவுக்கு மறு உருவம் கிடையாது எனக் கூறியுள்ள அவர், 23ஆம் புலிகேசி மன்னராக ஆர்.பி.உதயகுமார் இருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். எடப்பாடி அணியால் நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் எவ்வித நிபந்தனையும் இன்றி இணையத் தயார் எனக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 11, 2025
மாதம் ₹60,650 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் ஆப்ரேட்டர், செக்யூரிட்டி கார்டு, மேனேஜ்மென்ட் டிரெய்னி உட்பட 656 காலிப்பணியிடங்கள் உள்ளது. 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹16,900-₹60,650 வரை சம்பளமாக கிடைக்கும். 29 வயதுக்குள் இருப்பவர்கள் செப்.12-க்குள் www.bemlindia.in -ல் விண்ணப்பியுங்கள். SHARE.
News September 11, 2025
ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க SK: ரஜினி புகழாரம்

தனது ரோல் மாடலான ரஜினிகாந்திடம் இருந்து ஒரு அளப்பரிய அன்பு கொண்ட பரிசை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். ‘மதராஸி’ படம் பார்த்த பின்பு SK உடன் தொலைபேசியில் பேசிய ரஜினி, ‘My God’ ஆக்ஷனில் கலக்கியிருப்பதாக பாராட்டியுள்ளார். முக்கியமாக, ‘ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க SK’ என்று ரஜினி தெரிவித்ததாக நெகிழ்ந்துள்ளார். தனது டிரேட்மார்க் சிரிப்பால் வாழ்த்தியதாகவும் SK, தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
News September 11, 2025
CM ஸ்டாலின் வீட்டில் துயரம்.. தலைவர்கள் நேரில் அஞ்சலி

CM ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி(80) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை OMR-ல் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.