News November 20, 2024
நெருக்கடியான காலகட்டத்தில் அதிமுக: திருமாவளவன்

அதிமுக நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக அதிமுகவை தனிமைப்படுத்தும் வேலைகளை அக்கட்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவின் தேவை பாஜகவுக்கு உள்ளதாகவும், அதற்காக எந்த எல்லைக்கும் பாஜக செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 23, 2026
பாமக கடந்து வந்த பாதை.. இதுதான் ரொம்ப குறைவாம்!

1991 முதல் சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் பாமக, முதல்முறையாக 20 தொகுதிகளுக்கும் குறைவாக போட்டியிடவுள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை; 1991 – 194 (தனி அணி), 1996 – 116 (தனி அணி), 2001 – 27( அதிமுக+), 2006 – 31 (திமுக+), 2011 – 30(திமுக+), 2016- 234(தனி அணி), 2021 – 23(அதிமுக+), 2026 – 18(அதிமுக+). மறுபுறம் பாமகவுக்கு உரிமை கோரும் ராமதாஸ், அஇபுதமமுக உடன் கூட்டணி வைத்துள்ளார்.
News March 23, 2026
FLASH: விலை ₹30,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

<<19458440>>தங்கத்தை<<>> போன்று வெள்ளி விலையும் காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹30,000 குறைந்திருப்பது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. மார்ச் 14-ல் ₹2.8 லட்சத்திற்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, தற்போது ₹2.5 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. அதேநேரம், போர் நிறுத்தம் காரணமாக வரும் நாள்களில் விலையேற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. SHARE
News March 23, 2026
கெளதம் வாசுதேவ் மேனனுக்கு அதிர்ச்சியளித்த கோர்ட்

சிம்புவை வைத்து படம் எடுப்பதற்காக கெளதம் வாசுதேவ் மேனனுக்கு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ₹4.25 கோடி வழங்கியிருந்தார். ஆனால் படம் எடுக்காததால் பணத்தை திருப்பி தருமாறு எல்ரெட் தாக்கல் செய்த வழக்கில், ₹4.25 கோடியை 2010-ம் ஆண்டு முதல் 12% வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு GVM- க்கு தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து GVM, சென்னை HC-ல் தாக்கல் செய்த மனுவை தான் தற்போது கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.


