News April 28, 2025

திமுக ஆட்சி குறித்து பேச அதிமுகவிற்கு தகுதியில்லை: CM

image

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என பேசிய இபிஎஸ்-க்கு CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி என்று விமர்சித்த அவர், சட்டம் ஒழுங்கு குறித்து பேசவும், திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டவும் அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்தாக விமர்சித்தார்.

Similar News

News December 12, 2025

கோவா விவகாரத்தில் தோண்ட தோண்ட மோசடி

image

கோவாவில் 25 பேரின் உயிரை பறித்த <<18529860>>இரவு விடுதி<<>>யின் உரிமையாளர்கள் விரைவில் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமாக 42 நிறுவனங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், அதில் பெரும்பாலானவை ஆவணங்களில் மட்டுமே உள்ளது. அதுவும் ஒரே முகவரியில் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்படும் போலி நிறுவனங்கள் பெரும்பாலும் பினாமி பரிவர்த்தனை, பணமோசடிகளுக்கு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 547 ▶குறள்: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

News December 12, 2025

நானாவது கொஞ்ச நேரம் நின்றிருக்க வேண்டும்: SKY

image

எப்போதும் அபிஷேக் சர்மாவை நம்பி இருக்க முடியாது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். SA உடனான 2-அவது டி20 தோல்விக்கு பின்னர் பேசிய அவர் தானும், கில்லும் ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், கில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால், நானாவது கொஞ்ச நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த தோல்வி ஒரு பாடமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!