News March 21, 2024
இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தது அதிமுக

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு ஏப்ரல் 19ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
வேலூர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது பைக் கடந்த 19-ம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தியிந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் பைக் திருடிய ஸ்ரீகாந்த் (22), ஜெய்கணேஷ் (22) பிரகாஷ் (18) 3 பேரை கைது செய்தனர். மேலும் 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
News November 28, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை இன்று(நவ.28) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,840-க்கும், சவரன் ₹94,720-க்கும் விற்பனையாகிறது. <<18408962>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், நேற்று(₹240) போலவே இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
News November 28, 2025
காட்டுப்பூனைகளுக்கு எதிராக போரா?

‘காட்டுப்பூனைகளுக்கு எதிராக போர்’. கேட்டாலே ஆச்சர்யமாக உள்ளதல்லவா? நியூசிலாந்தில் உள்ள அரியவகை உயிரினங்களை காட்டுப்பூனைகள் வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. எனவே, பூர்வீக உயிரினங்களை காக்க, 25 லட்சம் காட்டுப் பூனைகளை 2050-க்குள் ஒழிக்க போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவற்றை ‘கொடூர கொலையாளிகள்’ என அறிவித்துள்ள அரசு, நியூசிலாந்து ஒரு பெரிய சூழலியல் போருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.


