News August 3, 2024
ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்தது அதிமுக

திமுக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தமிழக மீனவர்களின் நலனை முன்வைத்தும், மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 2 நாள்களுக்கு முன், இலங்கை கடற்படை படகு மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 484 ▶குறள்: ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். ▶பொருள்: ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
News October 10, 2025
எம்ஜிஆர், வ.உ.சி பெயர்கள் எங்கே? அதிமுக

தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கும் விஷயத்தில், தமிழகத்திற்கு அடையாளமாக திகழும் தலைவர்களை காழ்ப்புணர்ச்சியுடன் திமுக புறக்கணிப்பதாக அதிமுக சாடியுள்ளது. மாற்றுப் பெயர் பட்டியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் தீரன் சின்னமலை, இரட்டைமலை சீனிவாசன், வ.உ.சி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெறாதது ஏன் எனவும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
News October 10, 2025
கரூர் துயரில் உண்மை வெளிவர வேண்டும்: பிசி ஸ்ரீராம்

கரூர் துயரில் யார் மீது தவறு இருந்தாலும் உண்மை வெளிவர வேண்டும் என பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை பற்றி பயமின்றி உரக்கப் பேச வேண்டும் என்றும் காலங் கடந்தால் உண்மை சிதைந்துவிடும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், இதில் பேச்சு சுதந்திரம் இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.