News August 19, 2025
அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Similar News
News April 5, 2026
தென்காசி: விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழப்பு

குருவிகுளத்தை சேர்ந்த Rt.அரசு ஊழியர் ராதாகிருஷ்ணன் தனது தந்தைக்கு திதி கொடுக்க 3ம் தேதி உறவினர்களுடன் காரில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது துறையூர் 4 வழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு.
News April 5, 2026
அணைக்கட்டு அருகே விவசாயி தற்கொலை!

வேலூர் அடுத்த கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (71) விவசாயி. இவர் நேற்று (ஏப்.4) வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.