News August 17, 2024
தேர்தல் என்றாலே அதிமுக ஓட்டம் பிடிக்கிறது: ரகுபதி

விளவங்கோடு இடைத்தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளை வாங்காத அதிமுக ஆட்சியை பிடிப்போம் என்பது அரசியல் காமெடி என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். 11 தேர்தலாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுக, எப்படி ஆட்சியை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர், எம்.பி தேர்தலில் 11 தொகுதிகளில் அதிமுக 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறினார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News August 14, 2025
வைரமுத்து மீது நடவடிக்கை தேவை: அர்ஜுன் சம்பத்

சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமனை பைத்தியக்காரன் என வைரமுத்து இழிவுப்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். ஆளுநரிடமிருந்து பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி கிறிஸ்துவர் என்றும், ஆளுநரை உள்நோக்கத்துடன் அவர் அவமதித்துள்ளதால் அவரது பட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
News August 14, 2025
ஆகஸ்ட் 14: வரலாற்றில் இன்று

1947 – பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் விடுதலை பெற்ற நாள்.
1911 – பிரபல ஆன்மிக தலைவர் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த தினம்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் நடந்த 4 தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைந்த தினம்.
2018 – இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழப்பு.
News August 14, 2025
அரசியல் எதிரிகள் பார்த்த வேலை: தங்கமணி வேதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை இருந்த போதும், திருச்சியில் இபிஎஸ் சுற்றுபயணத்துக்காக தான் கட்சிப்பணி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னை குறித்து வந்த இச்செய்தியை எண்ணி மனவேதனைப்படுவதாகவும், அரசியல் எதிரிகளின் தவறான தகவல் செய்தியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.