News February 16, 2025
அதிமுக பெண் MLAவின் எக்ஸ் பக்கம் ஹேக்

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவின் மரகதம் குமரவேல். அவர் தனது தொகுதி பணி, கட்சிப் பணி உள்ளிட்ட தகவல்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், அவரது எக்ஸ் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அந்த பக்கத்தில் வெளியாகும் பதிவுகள் தனது பதிவுகள் அல்ல, அதை நம்ப வேண்டாம் என்று மரகதம் குமரவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 9, 2026
இனியன் சம்பத் காலமானார்

‘சொல்லின் செல்வர்’ ஈவிகே சம்பத்தின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான இனியன் சம்பத் காலமானார். திமுக, காங்., அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்த இனியன் சம்பத், 2016-ல் ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 9, 2026
மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக: ராகுல்

நாடு முழுவதும் ‘ஊழல்’ பாஜக கட்சி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆணவம் எனும் விஷம் பாஜக அரசியலில் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் புள்ளி விவரங்களாக மட்டுமே இருப்பதாக கூறிய அவர், மோடிஜியின் ‘டபுள் இன்ஜின் ஆட்சி’ பில்லியனர்களுக்காக மட்டுமே இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 9, 2026
மக்கள் நாயகன் காலமானார்

நாட்டு விடுதலைக்காக போராடிய மக்கள் நாயகனின் இறுதி மூச்சு இன்று அடங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தியவாதி மா.வன்னிக்காளை(92) உடல்நலக் குறைவால் காலமானார். விடுதலைக்கு பிறகும் பெண் குழந்தைகளின் கல்விக்கான சேவையில் ஈடுபட்டுவந்த அவர், அப்பணிக்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதினை 1991-ல் பெற்றார். மக்கள் பணிக்காக சிறந்த காந்தியவாதி உள்பட பல விருதுகளை வென்ற இந்த நாயகன் இப்போது நம்முடன் இல்லை. RIP


