News April 24, 2024
அதிமுக நிர்வாகிகள் விஸ்வாசம் இல்லை

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விஸ்வாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை மண்டல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பணிபுரியவில்லை” என்று நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Similar News
News March 21, 2026
அதிமுக கூட்டணியை CSK உடன் ஒப்பிட்ட TTV தினகரன்

டெல்லியில் இருந்தே அதிமுக இயக்கப்படுவதாக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், TTV புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். IPL-ல் தமிழ்நாட்டை CSK அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதற்கு தோனி கேப்டனாக உள்ளார். அதில் எத்தனை தமிழர்கள் உள்ளனர் என கேள்வி எழுப்பினார். முதலில் இதற்காக ஸ்டாலினை போராடச் சொல்லுங்கள் என்ற அவர், டெல்லி, தமிழ்நாடு என இனியும் பேசி மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
News March 21, 2026
மரண பயத்தில் மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவர்

உ.பி., புலந்த்ஷரை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், தன் மனைவியின் போனில் <<15809593>>புளூ டிரம்<<>> தொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்களை பார்த்த அவர், உடனே போலீஸுக்கு சென்று, ‘என் மனைவியின் போனில் இதெல்லாம் இருக்கு. அவ என்னை கொல்ல திட்டமிட்டிருக்கா… தயவுசெஞ்சு எங்கள பிரிச்சு விட்டுடுங்க…’ என கெஞ்ச, போலீஸும் பஞ்சாயத்து பேசி மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்தனராம்.
News March 21, 2026
பட்டியலே வெளியாகல.. வாக்கு வேட்டையில் செங்கோட்டையன்

இன்னும் வேட்பாளர் நேர்காணலையே தவெக முடிக்காத முன்பே, செங்கோட்டையன் தனக்கு வாக்களிக்குமாறு கோபி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். கோபியில் தொடர்ந்து 10-வது முறையாக போட்டியிடும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு ஆதரவாக தவெகவின் சத்தியபாமாவும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


