News April 15, 2025
அதிமுக நிர்வாகி மரணம்.. இபிஎஸ் நேரில் அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த சேலம் மாநகர அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இல்லத்திற்குச் சென்று இபிஎஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். 2 நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி செந்தில்குமாரன் உயிரிழந்தார். அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய இபிஎஸ், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சி நிர்வாகியின் அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி இன்றைய பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.
Similar News
News September 16, 2025
வங்கி கணக்கு KYC அப்டேட் பண்ணுவது எப்படி?

வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்வது அவசியம். அதற்கு: *வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Login செய்யவும். *அதில், ‘KYC அப்டேட்’-ஐ கிளிக் செய்து, ‘வங்கி விவரங்களைப் புதுப்பி’ ஆப்ஷனை தட்டவும். *ஆதார், பான் & முகவரிச் சான்றுகளுடன் (ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டணம்) போட்டோ போன்றவற்றை டிஜிட்டல் வடிவத்தில் பதிவேற்றி, Submit செய்தால், முடிஞ்சு! SHARE.
News September 16, 2025
உடனே வழங்க வேண்டும்: PM மோடிக்கு CM ஸ்டாலின்

தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்கிட வலியுறுத்தி PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெ., டன் டிஏபி, 12,422 மெ., டன் எம்ஓபி, 98,623 மெ., டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை வழங்கிட, மத்திய ரசாயன & உர அமைச்சகத்திற்கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளார். இது விவசாயிகளின் பயிர் உற்பத்திக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
அன்புமணியை சாடிய ஜிகே மணி

பாமகவில் மோதல்போக்கு நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையில், தைலாபுரத்தில் ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என்றும், பாமகவின் நிறுவனர், தலைவர் எல்லாமே ராமதாஸ்தான் எனவும் குறிப்பிட்டார். ராமதாஸிற்கு தெரியாமல் பாமக அலுவலகத்தின் நிரந்தர முகவரியை தேனாம்பேட்டையில் இருந்து திலக் தெருவிற்கு மாற்றி இருப்பதாகவும் ஜிகே மணி குற்றஞ்சாட்டினார்.