News April 7, 2025

அதிமுக Ex M.P. சி.பெருமாள் உடல் நல்லடக்கம்!

image

அதிமுக மூத்த தலைவரும், Ex எம்.பியுமான சி.பெருமாள் (68) உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆம்பள்ளி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் நேற்று மறைந்த அவரது உடலுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் நேரில் அஞ்சல் செலுத்தினர்.

Similar News

News April 12, 2025

3 ஆண்டுகளாக தொடர் மாதவிடாயால் தவிக்கும் பெண்!

image

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாதவிடாயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. அமெரிக்காவை சேர்ந்த பாப்பி இதனை நகைச்சுவையாக டிக்டாக்கில் பதிவிட, இவ்விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. மருத்துவ ரீதியாக அப்பெண்ணின் யூட்ரஸில் நீர்க்கட்டி கண்டறிந்த போதிலும் பிறவி குறைபாடு என்பதால் தீர்வு காணமுடியாமல் டாக்டர்கள் திக்குமுக்காடுகின்றனராம். So Sad!

News April 12, 2025

2026ல் தவெக –திமுகவுக்கு இடையே தான் போட்டி: விஜய்

image

அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ள நிலையில், 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தனது பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்க கூட்டாளியாக பாஜக மீண்டும் கைப்பிடித்தது பெரிய ஆச்சரியமில்லை. 2026ல் தவெக, திமுகவுக்கு இடையே தான் போட்டி என கூறியுள்ளார்.

News April 12, 2025

7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

image

கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (ஏப்.12) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ( MET) கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?

error: Content is protected !!