News August 17, 2024
அதிமுகவுக்கு பாஜகவின் அன்பு தேவையில்லை: விந்தியா

அண்ணாமலையின் அன்பு, அதரவு அதிமுகவுக்கு தேவையில்லை என விந்தியா தெரிவித்துள்ளார். அண்ணாமலை அதிமுகவை ஞாபகம் வைத்துக்கொண்டாலும், அதனால் அதிமுக கூட்டணியில் மாற்றம் வரப்போவதில்லை என்று கிண்டல் செய்த அவர், அதிமுகவின் பெருமையை மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அண்ணாமலைக்கு தெரிந்திருக்கும் என்றார். முன்னதாக, ஓராண்டாக அதிமுகவை மறந்து விட்டோம் என அண்ணாமலை கூறியிருந்தார்.
Similar News
News December 13, 2025
அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனே அமல்படுத்த கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் 2026 ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் ஊழலை கண்டித்து கடந்த 2011-ல் டெல்லியில் இவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதால், மத்தியில் காங்., ஆட்சி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 13, 2025
பாகிஸ்தானில் மகாபாரத, சமஸ்கிருத படிப்புகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக சமஸ்கிருத இலக்கிய படிப்பு, லாகூர் பல்கலைகழகத்தில் (LUMS) கற்பிக்கப்பட தொடங்கியுள்ளன. இதோடு சேர்த்து பகவத் கீதை, மகாபாரதத்தின் சில முக்கிய பகுதிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ஷாகித் ரஷீத், அடுத்த 10-15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து பகவத் கீதை, மகாபாராத அறிஞர்கள் வெளிவருவார்கள் என தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 13, கார்த்திகை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


