News April 5, 2024
எந்த கட்சியை நம்பியும் அதிமுக இல்லை

அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காரணத்தால் மட்டுமே பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். பாஜக உள்பட எந்த கட்சியையும் நம்பி அதிமுக எப்போதும் இருந்தது இல்லை, எங்களுடன் இணைந்ததால் அவர்கள் தான் பலனடைந்தார்கள் என்று தெரிவித்தார். மேலும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்ற அவர், ராமநாதபுரத்தில் 4 ஓபிஎஸ் நிற்பதற்கு அதிமுக காரணம் இல்லை என்றார்.
Similar News
News January 21, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 21, தை 7 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 21, 2026
திமுக அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: விவசாயிகள்

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் நடைபெற்ற
விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர், தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
News January 21, 2026
யானை கழிவில் இருந்து சுவையான காபி!

உலகின் மிக அரிய காபியான Black Ivory coffee மிகவும் சுவையாக இருப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த காபி தாயாரிக்கப்படும் தாய்லாந்தில், யானைகளுக்கு Arabica காபி செர்ரிகள் வழங்கப்பட்டு, பின்னர் அவற்றின் கழிவுகளில் இருந்து காபி விதைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்து வறுத்து காபி தயாரிக்கப்படுகிறது. யானைகளின் குடலில் உள்ள பாக்டீரியா அதன் கசப்பு தன்மையை குறைக்க உதவுகின்றன.


