News April 13, 2024
அதிமுக-தேமுதிக கூட்டணி பெரும் வெற்றி பெறும்

அதிமுக – தேமுதிக கூட்டணி மக்களும், தொண்டர்களும் விரும்பிய கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதிகாரம், பண பலத்தை மீறி இந்தக் கூட்டணி 2011 போல இப்போதும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று சூளுரைத்தார். மேலும், திமுகவின் இரண்டரை ஆண்டு ஆட்சியும், பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியும் மக்களிடம் பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கியுள்ளதால், நிச்சயம் மாற்றம் வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News September 8, 2025
CM ஸ்டாலின் மீது இயக்குநர் கடும் விமர்சனம்

கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை செலுத்தியதை இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உழைக்கும் மக்களாகிய தூய்மை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க CM ஸ்டாலின் காவல்துறையை ஏவி அவர்களை அடித்து விரட்டியதாக சாடியுள்ளார். CM ஸ்டாலினை போலி சமூகநீதி முதல்வர் என்று லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
கேப்டனை திட்டி வளர்ந்தவர் சீமான்: விஜய பிரபாகரன்

சீமான் டிரெண்டிங்கில் இருக்கும் நபர்களை திட்டுபவர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய காலக்கட்டத்தில் டிரெண்டிங்கில் இருந்த கேப்டனை திட்டி சீமான் பெரிய ஆளாகினார் எனவும் பிறரை திட்டியே வாக்குகளை பெற்று கட்சியை வளர்த்தார் என்றும் கூறினார். மேலும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என விஜய பிரபாகரன் பேசினார்.
News September 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க