News March 16, 2024
அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்தை

அதிமுகவும் தேமுதிகவும் 3ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் பிரேமலதாவின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். பின்னர் மார்ச் 6ஆம் தேதி அவர்களுக்குள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்திவரும் அவர்கள், விரைவில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
Similar News
News October 22, 2025
வீட்டை சொர்க்கமாய் மாற்றும் செடிகள் இவைதான்

முன்பு வீட்டை சுற்றி மரம், செடி, கொடி என சூழ்ந்து இருந்ததால், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தோம். இன்று அப்பர்ட்மென்டுகளில் சுத்தமான காற்று கூட கிடைக்காமல், Air purifier வைத்து வாழ்த்து கொண்டிருக்கிறோம். மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம் என்றாலும் வீட்டின் பால்கனியில் சில செடிகளை வைத்து வளர்த்தால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். அது என்ன செடிகள் என மேலே உள்ள SWIPE செய்து பாருங்கள்.
News October 22, 2025
நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. *உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.
News October 22, 2025
NATIONAL ROUNDUP: பிஹாரில் 1,314 வேட்பு மனுக்கள் ஏற்பு

▶சபரிமலை கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் ▶பிஹார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் 1,314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ▶பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தகவல் ▶கேரளாவில் வெளுத்து வாங்க தொடங்கிய கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.