News April 22, 2025
ஏப்.25-ல் அதிமுக மாவட்ட செயலாலர்கள் கூட்டம்!

வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ராயபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4:30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக வலுவான தொகுதிகள், பலவீனமான தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம்.
Similar News
News January 3, 2026
அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அளித்த பொங்கல் பரிசு

அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) குறித்து CM ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு உண்மையாக இருக்கும் என மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக <<18749969>>TAPS<<>> அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
தேர்தல் அறிக்கைக்கு ‘ஆப்’ ரிலீஸ் செய்த திமுக!

திமுக தேர்தல் அறிக்கைக்கான ‘DMK Manifesto 2026’ செயலியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இது, தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட கனிமொழி தலைமையிலான குழு, இந்த செயலியை கண்காணித்து, அறிக்கையை தயார் செய்யும்.
News January 3, 2026
‘ரஜினி 173’ படத்தின் கதை இதுதானா..!

ரஜினியின் 173-வது பட அப்டேட் இன்று வெளியான நிலையில், படத்தின் கதை இதுதான் என நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர். அதன்படி, ரஜினி ஒரு காலத்தில் நேர்மையான போலீஸாக இருந்தார். பின் தனது பேமிலிக்காக சாதாரண டெய்லராக (போஸ்டரில் உள்ள கத்தரி, நூலை அடிப்படையாக வைத்து) வாழ்க்கையை தொடர்கிறார். எனினும் தன்னை துரத்தும் எதிரிகளிடமிருந்து எப்படி குடும்பத்தை காக்கிறார் என்பதே கதையாக இருக்கும் என கணித்துள்ளனர்.


