News August 25, 2024
அதிமுக, தவெக கூட்டணியா? இபிஎஸ் ரியாக்சன்

விஜய் உடன் கூட்டணி அமையுமா? இல்லையா? என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை இருப்பதாகவும், அதை நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
Similar News
News October 26, 2025
மைசூரு – நெல்லை, மைசூரு – காரைக்குடி ரயில்கள் ரத்து!

மைசூரிலிருந்து நெல்லை, ராமநாதபுரம், காரைக்குடி செல்லும் வாராந்தர சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு – திருநெல்வேலி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் அக்.27-ல் இருந்து நவ.25-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதேபோல் மைசூரு – காரைக்குடி இடையேயான ரயிலும் அக்.30 முதல் நவ.30 வரை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
BREAKING: நெருங்கும் புயல் சின்னம்.. வெளுக்கும் கனமழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று(அக்.26) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ‘Montha’ புயல் நாளை மறுநாள் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்போது தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
News October 26, 2025
வாழ்வை சிறப்பாகும் 20-20-20 Rule தெரியுமா?

காலை எழுந்ததும் முதல் 1 மணி நேரம் 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையை மாற்றும் என்கின்றார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். அடுத்த 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3-வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்.


