News April 22, 2025

கார்ட்டூன் மூலம் செந்தில் பாலாஜியை விமர்சித்த அதிமுக

image

ஒவ்வொரு மானியக் கோரிக்கையின்போதும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மரியாதை செய்வது வழக்கம். இன்று மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் நிலையில், கருணாநிதி சமாதியில் Decoration-லாம் கரெக்ட்டா பண்ணியாச்சா “தியாகி” அமைச்சரே? என்று கேள்வியுடன் குவாட்டருக்கு ₹10 EXTRA என அதிமுக கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

இந்தியாவுக்கு எதிராக ரெக்கார்டு படைத்த டி காக்

image

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் சதம் அடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார். அவர் IND-வுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். கில்கிறிஸ்ட் Vs SL மற்றும் சங்கக்காரா Vs IND, தலா 6 சதங்கள் விளாசியிருந்தனர். மேலும், ODI-ல் அதிக சதம் அடித்த WK பட்டியலில் சங்கக்காராவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் தலா 23 சதமடித்துள்ளனர்.

News December 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

News December 7, 2025

ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

image

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!