News March 26, 2024

தீ மிதித்து வழிபாடு செய்த அதிமுக வேட்பாளர்

image

கோவை மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டி, பாப்பநாயக்கன்பாளையம் பண்ணாரி அம்மன் குண்டத் திருவிழாவில், தீ மிதித்து வழிபாடு செய்தார். பின், கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார்.

Similar News

News February 16, 2026

ராணிப்பேட்டை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

ராணிப்பேட்டை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 16, 2026

இந்தியா AI-ல் முன்னிலையில் உள்ளது: மோடி

image

டெல்லியில் இன்று தொடங்கும் India AI Impact உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலகத் தலைவர்கள், நிறுவன தலைவர்கள், ஆய்வாளர்கள் & ஆர்வலர்களை வரவேற்று PM மோடி X-ல் பதிவிட்டுள்ளார். அதில், நமது நாடு AI மாற்றத்தில் முன்னணியில் உள்ளதாக தெரிவித்த PM மோடி, உச்சி மாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, புதுமையான மற்றும் வாய்ப்புகள் சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News February 16, 2026

திமுக ஆட்சியில் தினுசு தினுசான குற்றங்கள்: நயினார்

image

<<19157241>>ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிபதி <<>>மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். திறனற்ற திமுக ஆட்சியில் நடக்கும் தினுசு தினுசான குற்றங்களால் தமிழக மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கை சரியாக கையாளாத திமுக அரசை தப்பித்தவறி கூட மீண்டுமொருமுறை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!