News March 26, 2024
அதிமுக வேட்பாளரிடம் ₹648 கோடி சொத்து

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் மொத்தம் ₹648 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அசோக்குமார் பெயரில் ₹526 கோடிக்கு அசையும் சொத்து, ₹57 கோடிக்கு அசையா சொத்து மற்றும் மனைவி கருணாம்பிகா பெயரில் ₹47 கோடிக்கு அசையும் சொத்து, ₹22 கோடிக்கு அசையா சொத்தும் உள்ளன. இவர் பாஜக MLA சரஸ்வதி மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 311 ▶குறள்: சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும், அதன் பொருட்டுப் பிறருக்கு கேடு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
News April 20, 2025
விநோதம்: இறந்தவர்களை மணக்கும் பெண்கள்!

சீனாவில் இறந்தவர்களை மணக்கும் விநோத பழக்கம் உள்ளது. இறந்தவர்கள் அடுத்த ஜென்மத்தில், பிரம்மச்சாரியாக இருப்பதை தவிர்க்க இந்த பேய் திருமணம் செய்யப்படுகிறது. இறந்த மகன், மகளுக்கு ஃபெய் சுங் மாஸ்டரை நியமித்து வரன் தேடுகிறார்கள். வரன் அமைந்ததும், கல்லறையில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது. இந்த பழக்கத்திற்கு சீன அரசு தடைவிதித்திருந்தாலும் இன்னும் தொடர்கிறது.
News April 20, 2025
சின்னத்துரை மீதான தாக்குதல்: 2 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டகிராம் மூலம் பழகியவர்கள் சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீஸ், சங்கரநாராயணன், சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளது. இதில், தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸ் தேடி வருகிறது.