News April 9, 2024

அதிமுக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

image

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரப்புரையில் இருந்த தமிழ்மணி திடீரென மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்காக நாமக்கல் தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 26, 2026

மாணவி வன்கொடுமை… சர்ச்சையை கிளப்பிய SV சேகர்

image

வன்கொடுமைக்கு ஆளான தூத்துக்குடி மாணவி ஏன் புதருக்குள் போகவேண்டும் என எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர், பெண்கள் காட்டுக்குள் பாத்ரூம் போனால் கூட துணைக்கு யாராவது போகவேண்டும் என கூறியுள்ளார். மேலும், பீரோவை பூட்டாமல் சென்றுவிட்டு திருடன் திருடிவிட்டான் என்றால், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என கூற முடியுமா என சர்ச்சையாக பேசியுள்ளார்.

News March 26, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 26, 2026

ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரசாரம்

image

விஜய் தனது பிரசாரத்தை மார்ச் 28-ல் தொடங்கவுள்ளார். ஒரு நாளில் 5 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அவர், முதலில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கத்தை கவர் செய்யவுள்ளாராம். காலை 10 – மாலை 4 வரை நடக்கவுள்ள பிரசாரத்தில் 3,000 பேர் பங்கேற்பார்கள் என்றும் போலீஸில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!