News October 27, 2025
கூவி கூவி அழைக்கும் அதிமுக? செல்லூர் ராஜு பதிலடி

கூட்டணிக்கு வாங்க என்று தவெகவை கூவி கூவி அதிமுக அழைப்பதாக TTV தினகரன் விமர்சித்திருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு, அரசியலில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக அதிமுகவை TTV தினகரன் விமர்சிப்பதாக செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட் என்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
ASEAN மாநாடு: USA அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்

மலேசியாவில் நடைபெற்று வரும் ASEAN உச்சிமாநாட்டில், USA வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். நேற்று, பாக்.,கை விட <<18114416>>இந்தியாவின் நட்பு<<>> முக்கியம் என ரூபியோ தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இருவரும் சர்வதேச அரசியல், வர்த்தக ஒப்பந்தம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
News October 27, 2025
BREAKING: மன்னிப்பு கேட்டார் விஜய்

மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், உங்களின் குடும்பத்தில் ஒருவனான என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்போதும் தானும், கட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.
News October 27, 2025
ஹாஸ்பிடலில் சீரியஸாக இருக்கிறாரா ஷ்ரேயஸ்?

ஷ்ரேயஸுக்கு ஏற்பட்டிருக்கும் Internal Bleeding எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? அதிகமாக ரத்த கசிவு ஏற்பட்டால் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் தடைபடும், இதனால் உறுப்புகள் செயலிழந்து போகலாம். மூளை, மார்பு, வயிற்று பகுதிகளில் ஏற்படும் ரத்த கசிவுகளால் உயிரே பறிபோகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், <<18116578>>ஷ்ரேயஸுக்கு விலா எலும்பில்<<>> காயம் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.


