News March 16, 2024
அதிமுக-பாமக கூட்டணி?

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாமகவை தங்கள் கூட்டணி பக்கம் இழுக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த சி.வி.சண்முகம், விருப்ப தொகுதிகளை தர தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 470
▶குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
▶பொருள்: தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்ட மாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.
News September 26, 2025
நட்புக்கு இலக்கணம் அண்ணாமலை: டிடிவி தினகரன்

அண்ணாமலையின் தூண்டுதலே தனது செயல்பாடுகளுக்கு காரணம் என சிலர் சொல்வது முற்றிலும் தவறு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நட்புக்கு சிறந்த இலக்கணம் அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரே பதில் அளித்துள்ளார் என தெரிவித்த டிடிவி, அவர் எல்லாவற்றையும் கடந்து தனது செயல்பாடுகளால் உயர்ந்த நிலைக்கு வருவார் எனவும் கூறியுள்ளார்.
News September 26, 2025
சித்தராமையா கோரிக்கைக்கு NO சொன்ன விப்ரோ நிறுவனர்

பெங்களூருவில் போக்குவரத்தை கட்டுப்படுத்த விப்ரோ வளாக சாலையில், பொது வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என CM சித்தராமையா வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் CM கோரிக்கையை விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்தார். விப்ரோ வளாகத்தில் பொதுமக்களை அனுமதிப்பது நீண்டகால தீர்வு அல்ல என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் போக்குவரத்தை சரிசெய்ய தொழில்நுட்பம் சார்ந்து உதவ தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.