News April 2, 2025
அதிமுக – பாஜக மீண்டும் மீண்டும் சந்திப்பு

பாஜக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை டெல்லியில் அமித் ஷாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்தார். அதேபோல, நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்து பேசினார். கடந்த வாரம் EPS அமித் ஷாவை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 20, 2026
மகளிர் உரிமை தொகை ₹1,500.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, 10 முக்கிய வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ₹1,000-ஆக உள்ள மகளிர் உரிமைத் தொகை பொதுப்பிரிவு மகளிருக்கு ₹1,500 ஆகவும், SC/ST பிரிவு மகளிருக்கு ₹1,700 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல, வேலைதேடும் இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1,500 தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
News March 20, 2026
‘நான் சாகப் போகிறேன்’

‘நான் எங்கேயோ, யார் கூடயோ போறேன்னு சொல்ற. நான் உனக்கு மனசால கூட துரோகம் நினைக்கல. ஆனா, நீ என்ன நம்பல. நான் ஒரு நல்ல முடிவ எடுத்து இருக்கேன். கடைசி வர உன்கூட தான் இருப்பேன். I LOVE YOU’. தாம்பரம் அருகே இளம்பெண் அபிநயா(30) தனது கணவன் அருண் குமாருக்கு கடைசியாக அனுப்பிய மெசெஜ் இது. தனது நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால், திருமணமான மூன்றே மாதத்தில் அபிநயா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகம்.
News March 20, 2026
கூட்டணியில் இணைந்தார் ராமதாஸ்.. அரசியல் திருப்பம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண இருப்பதாக ராமதாஸ் – சசிகலா இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். தைலாபுரத்தில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் ஒன்றாக தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


