News August 5, 2024

மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி?

image

அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகலாம் என, திமுக முன்னாள் எம்.பி செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலையுடன், தலைவர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய தலைவர் பதவிக்கு, வானதி, நயினார் நாகேந்திரன் பெயர்கள் அடிபடுகின்றன.

Similar News

News March 20, 2026

மின்னணு வாக்கு இயந்திரம் வைப்பதற்கான இடத்தில் ஆய்வு

image

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்கு இயந்திரம் வைப்பதற்கான இடத்தினை இன்று மார்ச். 20 விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயா, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் இருந்தனர்.

News March 20, 2026

தமிழகத்தில் 5 முனைப் போட்டி

image

TN தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், புதிதாக அஇபுதமமுக – பாமக(ராமதாஸ்) கூட்டணி உருவாகியுள்ளது. NDA உடன் கூட்டணி இல்லை என விஜய் தெளிவுபடுத்தியதால் திமுக+, அதிமுக+, நாதக, தவெக என தேர்தல் களம் 4 முனைப் போட்டியாக இருந்தது. இன்று உருவாகியுள்ள புதிய கூட்டணியால் 2021-ஐ போல தேர்தல் களம் 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது. 2021-ல் அதிமுக+, திமுக+, நாதக, மநீம+, அமமுக+ ஆக இருந்தது.

News March 20, 2026

விஜய் மீண்டும் நடிக்கிறார்.. ஷூட்டிங் புறப்பட்டார்

image

தேர்தல் பணிகளுக்கு மத்தியில் விஜய் இன்று இரவு 7 மணிக்கு மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் போது சில காட்சிகளை நீக்க சென்சார் போர்டு அறிவுறுத்தியதால், கதையில் சில மாற்றம் செய்து புதிய காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் புதிய காட்சிகளில் நடிக்கவும், போஸ்ட் புரொடக்‌ஷென் பணிகளை முடித்து கொடுக்கவும் அவர் மும்பைக்கு பறந்துள்ளார்.

error: Content is protected !!