News April 9, 2024
35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்

மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் சூளுரைத்தார்.
Similar News
News January 26, 2026
டிராபிக்கால் 12 மணி நேர வேலை.. நொந்துபோன ஊழியர்

பெங்களூருவின் மோசமான டிராபிக் காரணமாக தினசரி அலுவலகத்திற்கு செல்ல 2 – 3 மணி நேரம் ஆவதாக அங்கு வேலை செய்யும் ஐடி ஊழியர் ஒருவர் SM-ல் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பயண நேரத்தையும் சேர்த்தால், 9-5 என்பது 9-9 ஆக மாறிவிடுகிறது என்றும், வாழ்க்கையின் பொன்னான நேரத்தை ஆடுகளைப் போல கூட்டமாக அலுவலகங்களுக்குச் செல்வதிலேயே செலவிடுகிறோம் எனவும் கூறியுள்ளார். உங்கள் சிட்டியில் டிராபிக் எப்படி உள்ளது?
News January 26, 2026
10 ஆண்டுகளாக வன்கொடுமை.. நடிகர் கைது

வீட்டில் வேலை செய்த பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலிவுட் நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டாலும், திருமணம் செய்து கொள்வார் என நம்பிக்கையில், இதுகுறித்து பொதுவெளியில் பேசவில்லை என அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நதீம் கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 26, 2026
70% வரி குறைப்பு.. கார்கள் விலை குறைகிறது

இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை கார்கள் மீதான வரி 110%-ல் இருந்து 40% ஆக குறைக்கப்படவுள்ளது. ₹16 லட்சத்துக்கு மேல் இறக்குமதி விலை உள்ள கார்களுக்கு இது பொருந்தும். இதனால் பென்ஸ், BMW உள்ளிட்ட கார்களின் விலை இந்தியாவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


