News April 4, 2024
தமிழகத்தில் அதிமுக கூட்டணி; புதுவையில் பாஜக கூட்டணி

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக சீட் தராததால் அதிருப்தியில் இருந்த அக்கட்சி, சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடம் ஒதுக்குவதாக அதிமுக உறுதியளித்த பின் கூட்டணியில் தொடருவதாக அறிவித்தது. இந்நிலையில் புதுவையில் புரட்சி பாரதம் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2025
திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக..!

பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாநாட்டுக்கான அழைப்பிதழை பாமக மாவட்டச் செயலாளர் சரவணன் கொடுக்க, அதனை சிரித்த முகத்துடன் திருமாவளவன் பெற்றுக் கொண்டுள்ளார். மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார். 2011-ல் திமுக கூட்டணியில் பாமக – விசிக இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News April 20, 2025
வரலாற்றில் இன்று!

➤ 1889 – சர்வாதிகாரியாக வரலாற்றில் அறியப்படும் ஹிட்லர் பிறந்த நாள். ➤ 1950 – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிறந்த நாள். ➤ 1972 – யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது. ➤ 2012 – பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டு 127 பேர் உயிரிழப்பு. ➤ 2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் பலி.
News April 20, 2025
தேர்தலுக்கு மட்டுமே பாஜக கூட்டணி: SP வேலுமணி

2026-ல் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இருப்பது தேர்தலுக்கான கூட்டணி எனத் தெரிவித்த அவர், வக்ஃப் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.