News September 3, 2025
நீதிமன்றங்களில் AI பயன்பாடு?

பள்ளி மாணவர்களும் AI கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் உலகில் தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நீதித்துறையிலும் AI நுழைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட, அமர்வு நீதிமன்றங்களில் வரும் சிறிய வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக AI பயன்பாட்டை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக வழக்குகளை கையாள முடியும். உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 5, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தங்கம் விலை இன்றும் (மார்ச் 5) மளமளவென குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கம் ₹80 குறைந்து ₹15,120-க்கும், 1 சவரன் ₹640 குறைந்து ₹1,20,960-க்கும் விற்பனையாகிறது. போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்து வருகிறது.
News March 5, 2026
போர் பதற்றம்.. தொடரை தள்ளிவைத்த ICC!

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, நேபாளத்தின் கீர்திபூரில் நடைபெற இருந்த ODI WC லீக்-2 தொடரின் 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ODI உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்காக நடத்தப்படும் இந்த தொடரில் நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத இருந்தன. தொடர் நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ICC அறிவித்துள்ளது.
News March 5, 2026
விஜய்யுடன் யார் பேசுனா? செல்வப்பெருந்தகை

விஜய்யுடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதேநேரம், வேறு யாரேனும் தனிப்பட்டு பேசியிருந்தால், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக – காங்., தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கூடுதலாக 3 + 1 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


