News May 17, 2024
வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறியும் AI

யானை உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில், அவற்றின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட AI சோதனை கேரளாவில் வெற்றி பெற்றுள்ளது. நிலத்தில் புதைக்கப்பட்ட கருவி, நில அதிர்வு மூலம் விலங்குகளின் நடமாட்டத்தை கண்டறியும் முதல்கட்ட சோதனை பாலக்காட்டில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
தம்பதியரே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க…

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும்.
News December 15, 2025
இந்தியா சாம்பியன்: CM ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் நடந்த SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில், ஹாங்காங்கை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், மகுடம் சூடிய இந்திய அணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் இந்த மகத்தான சாதனை தமிழகத்தில் விளையாட்டு அமைப்பின் நம்பிக்கை & சிறப்பை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
News December 15, 2025
ராசி பலன்கள் (15.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


