News September 17, 2025
போட்டோ ஷூட்டுக்கு பை பை சொன்ன AI

முதல்ல பிரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங், பேபி போட்டோ ஷூட் அலப்பறைகள் சோஷியல் மீடியாவில் அதிகமாக இருந்தது. அந்த அலப்பறைகளுக்கு இப்போ AI முடிவுகட்டியுள்ளது. Costume, Background சொல்லி நம்ம போட்டோவா AI தொடர்பான APP-களில் அப்லோட் பண்ணா போதும். விதவிதமான போட்டோஸை AI அள்ளி கொடுத்துவிடும். அதன் சாம்பிள்தான் இன்ஸ்டாவில் கொட்டிக்கிடக்கும் GEMINI எடிட்டடு போட்டோஸ். இனிமே எதுக்கு போட்டோஷூட்?
Similar News
News September 17, 2025
திருமணத்துக்கு தங்கம்: விண்ணப்பிப்பது எப்படி?

ஏழை விதவை தாய்மார்களின் மகள்களின் திருமணத்துக்கு ₹50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தில் பயன்பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மேல் இருக்கக்கூடாது. திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பியுங்கள். விண்ணப்ப நிலையை https://edistricts.tn.gov.in/socialwelfare-ல் அறிந்துகொள்ளலாம்.
News September 17, 2025
தமிழகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்!

சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுடன் கூடிய புதிய சர்வதேச நகரம் அமைக்க TIDCO டெண்டர் கோரியுள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இறுதி செய்யப்பட்ட நிலையில், மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
News September 17, 2025
டாப் 10 ஹில் ஸ்டேஷன்

தென்னிந்திய ஹில் ஸ்டேஷன்கள் பெரும்பாலும் மூடுபனி நிறைந்த மலைகள், அமைதியான ஏரிகள் மற்றும் கண்கவர் அருவிகள் ஆகியவற்றால் நிறைந்தவை. இயற்கை விரும்பிகள் மற்றும் மன அமைதி தேடுவோருக்கு ஏற்ற ஹில் ஸ்டேஷன் போட்டோஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த ஹில் ஸ்டேஷன் எது? கமெண்ட்ல சொல்லுங்க.