News August 16, 2024
வாட்ஸ்அப்பில் 2 நொடியில் AI போட்டோ…

பயனாளர்களை தக்கவைக்க சமூக வலைதள செயலி நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் AI வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நீங்கள் எளிமையாக AI போட்டோக்களை உருவாக்க முடியும். உதாரணமாக, AIக்கான Blue Circleஐ கிளிக் செய்து, imagine elephant என டைப் செய்தால் 2 நொடிகளில் அந்த போட்டோ வந்துவிடும். Just Try it.
Similar News
News August 15, 2025
இளையராஜா – வைரமுத்து பிரிவுக்கு இதுதான் காரணம்

தனக்கும், தனது அண்ணன் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட சண்டையால் 10 ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பட நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இந்த காலகட்டத்தில் நுழைந்த வைரமுத்து, இளையராஜா வளர்ந்து வருவதற்கு, தானே காரணம் என பல மேடைகளில் கூறியதாக தெரிவித்தார். இதனை முதலில் நம்பாத ராஜா, பின்னர் ஆதாரப்பூர்வமாக அறிந்ததால் வைரமுத்து – இளையராஜா இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறினார்.
News August 15, 2025
பாரபட்சம் காட்டும் மத்திய அரசு: ஸ்டாலின் தாக்கு

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வளர்ச்சியை விட TN அரசின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தின் நிதியை கூட போராடி வாங்க வேண்டியுள்ளதாகவும் சாடியுள்ளார்.
News August 15, 2025
6 ஆண்டுகளில் 200% உயர்ந்த தங்கம்.. முதலீட்டுக்கு ஏற்றதா?

2019-ல் ₹30,000-க்கு விற்ற 24 கேரட் 10 Gram தங்கம் 200% உயர்ந்து தற்போது ₹1,01,340-யை தொட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 18% உயர்ந்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் போர்கள், கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் ஈர்த்ததாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் ₹2.25 லட்சம் வரை உயரலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உங்கள் கருத்து?