News January 31, 2025
புது அவதாரத்தில் AI! கண்ண காமிச்சா முடிச்சிருவான்!

AI-ன் அசுர வளர்ச்சி நம்மை வியக்க வைப்பதாக உள்ளது. அந்த வகையில், கூகுள் AI, நமது சேவகனாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. உதாரணமாக, அருகில் உள்ள சலூன் கடையை நாம் தேடினால், ASK FOR ME என்ற அப்டேட் வருகிறது. இதை க்ளிக் செய்து, சலூனில் நமக்கு என்ன மாதிரியான விவரங்கள் வேண்டும் என பதிவு செய்தால், அதுவே சலூனுக்கு போன் செய்து விவரங்களை பெற்று சொல்லும். தேவையெனில் APPOINTMENT-ஐயும் பெற்றுத் தரும்.
Similar News
News March 3, 2026
ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது இனி ரொம்ப ஈசி!

ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்க்க, இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். அதனை வீட்டில் இருந்தபடியே செய்யும் வகையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. www.tnpds.gov.in இணையதளம் சென்று, ‘புதிய உறுப்பினர் பெயரை சேர்க்க’ ஆப்சனை கிளிக் செய்து விவரங்களை உள்ளிடுங்கள். மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டால் உங்கள் விவரம் அரசுக்கு சென்றுவிடும். அதன்பின், 1 வாரத்திற்குள் பெயர் இணைக்கப்படும். SHARE
News March 2, 2026
இனிதான் சம்பவமே இருக்கு.. டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். US இன்னும் பெரிய தாக்குதலைத் தொடங்கவில்லை. விரைவில் ஒரு பெரிய தாக்குதல் நடக்கப் போகிறது. ஈரான் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். போர் அதிக நேரம் நீடிப்பதை நான் விரும்பவில்லை. 4 வாரங்களில் அது முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்குவது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் CNN-க்கு டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்.
News March 2, 2026
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா..!

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


