News February 24, 2026

AI ரூம்மேட்.. அசத்தும் பெங்களூரு இன்ஜினியர்

image

பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கத்தில் தனக்கு உதவி செய்ய AI ரூம்மேட்டை உருவாக்கியது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. தூக்கத்தின் நடுவே எழுந்து ஃபேனை ஆஃப்/ஆன் செய்வதற்கு சோம்பல் அடைந்துள்ளார். இதனால், அவர் உருவாக்கிய AI, அவரது கைகள் / கால்கள் போர்வைக்கு வெளியே இருந்தால், சூடாக இருப்பதை உணர்ந்து ஃபேனை இயக்கும். அது கைகள் / கால்கள் போர்வைக்கு உள்ளே இருந்தால் ஃபேனை அணைத்துவிடும்.

Similar News

News March 1, 2026

திமுக அரசினால் மீண்டும் ஒரு பேரழிவு: அன்புமணி

image

DMK அரசின் அலட்சியத்தால் கடந்த 4 நாள்களாக காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நடக்கவில்லை என அன்புமணி சாடியுள்ளார். வருவாய் துறையினரின் போராட்டத்தால் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டிருப்பதை தனது X பதிவில் சுட்டிக்காட்டி, இதுபற்றி திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என கூறியுள்ளார். ஏற்கெனவே மழையால் நெல்மணிகள் வீணான நிலையில், தற்போது கொள்முதல் தாமதமாவது விவசாயிகளுக்கு பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

சுப்ரீம் லீடர் கொமேனி உயிரிழப்பு: இஸ்ரேல்

image

இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் சுப்ரீம் லீடர் அலி கொமேனி உயிரிழந்துவிட்டதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். அவர் தங்கியிருந்த இடத்தின் மீது 30 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்குரிய ஆதாரங்கள் டிரம்ப், நெதன்யாகுவிற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கொமேனியுடன் சேர்த்து பல உயரதிகாரிகள் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

News March 1, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 624 ▶குறள்: மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ▶பொருள்: தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

error: Content is protected !!