News December 18, 2025
AI-ன் தீராத தாகத்தால் காலியாகும் தண்ணீர்!

AI-ன் அசுர வளர்ச்சி பூமியின் நீர் வளத்தை வேகமாக காலி செய்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். AI இயங்க தேவைப்படும் டேட்டா செண்டர்கள், அதீத வெப்பத்தை வெளியிடுகின்றன. அவை 24*7 இயங்குவதால், இதை குளிர்விக்க பல கோடி லிட்டர் நீர் தேவைப்படுகிறதாம். ஒவ்வொரு 100 வரிக்கும் ஒரு லிட்டர் நீர் அவசியமாகிறது. US-ல் கடந்த 2023-ல் மட்டும் இதற்காக 6,600 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டதாம்.
Similar News
News December 18, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததை தொடர்ந்து, வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தி வருகின்றன. இதனால் வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைந்துள்ளன. அதன்படி, எந்தெந்த வங்கிகள், எவ்வளவு வட்டி விகிதத்தை குறைத்துள்ளன என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். லோன் வாங்கியுள்ள உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 18, 2025
குளிரில் கைக்குழந்தைகளை தினமும் குளிப்பாட்டலாமா?

பிறந்த குழந்தைகளை குளிர் காலத்தில் தினமும் குளிப்பாட்டினால் சளி, காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம் அம்மாக்களுக்கு இருக்கும். அதற்கான நிபுணர்களின் டிப்ஸ் இதோ! *குழந்தையின் சருமம் வறட்சியாகாமல் இருக்க தினமும் குளிக்க வைக்கலாம் *மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வையுங்கள் *கெமிக்கல் உள்ள சோப்பை தவிர்ப்பது நல்லது *ஆயில் மசாஜ் செய்யலாம் *குழந்தை குறைந்த எடையில் இருந்தால் தினமும் குளிப்பாட்ட வேண்டாம்.
News December 18, 2025
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குக: CM ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி, CM ஸ்டாலின் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கலைஞர் பல்கலை., விளையாட்டு பல்கலை., மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறும் ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலரிடம் டி.ஆர்.பாலு உள்ளிட்ட INDIA கூட்டணி MP-க்கள் வழங்கினர்.


