News November 6, 2025
AI சிலருக்கு பணம் காய்க்கும் மரம்: பலருக்கு துயரம்

தொழில்துறையில் AI வளர்ச்சியால் எலான் மஸ்க் போன்ற பில்லியனர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள்; ஆனால் சாதாரண மக்கள் கடுமையான வேலை இழப்பை சந்திப்பார்கள் என நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் கஷ்டத்தை தொழிலதிபர்கள் எப்போதும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதேவேளையில் கல்வி, சுகாதாரத்தில் AI நிறைய நல்ல விஷயங்களை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
News November 6, 2025
கோவை பாலியல் கொடூரம்.. மதுவிலக்கு கோரும் திருமா

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த மதுவிலக்கை TN அரசு அமல்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கோவை மாணவி கூட்டு பாலியல் கொடூரமானது, பெண்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம் என்பதை உணர்த்துவதாக X-ல் அவர் தெரிவித்துள்ளார். அதிக மது அருந்துவதில் இந்தியாவிலேயே TN 2-வது மாநிலமாக இருப்பதாகவும், 12% குடிநோயாளிகளாக உள்ளது கவலையை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 6, 2025
விஜய்க்கு குற்ற உணர்ச்சியே இல்லை: வைகோ

கரூர் துயரில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் விஜய் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது தவறான போக்கு என வைகோ விமர்சித்துள்ளார். 41 பேர் உயிரிழப்பில் முழு பொறுப்பேற்க வேண்டிய விஜய் கண்ணியமற்ற வகையில் CM மீது வெறுப்பை கொட்டித் தீர்த்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத விஜய், ஆட்சிக்கு வந்தது போல் கற்பனை வாழ்வில் திளைக்கிறார் என்றும் வைகோ கூறியுள்ளார்.


