News March 15, 2025

வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு….

image

வேளாண் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கான அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இ-வாடகை செயலி மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 130 வேளாண் வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Similar News

News March 15, 2025

இந்திய அணியின் திறமைக்கு கிடைத்த பரிசு: மெக்ராத்

image

இந்திய அணி நியாயமற்ற முறையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதாக, தான் நினைக்கவில்லை என ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல முடியாத காரணத்தால் துபாயில் விளையாடியதாகவும், ஆனால், இந்தியா உள்நாட்டில் விளையாடியதை போல் சிலர் கூறுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் அனுபவத்தால் இந்திய அணி மிகச் சிறப்பாக ODI-யில் விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2025

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளம்பெண் போனி ப்ளூ

image

12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன் உறவு மேற்கொண்டு சாதனை படைத்ததாக கூறும் போனி ப்ளூவின் புதிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் கான்கன் (Cancun) நகரில் பதின்ம வயதினருடன் உறவு மேற்கொள்ள கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இது சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனத்தை சம்பாதித்துள்ளது. 25 வயது ஆபாச பட நடிகையான இவரது போக்குக்கு ஒரு முடிவே இல்லையா? என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

News March 15, 2025

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி

image

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்கும், ஏற்கெனவே முதல்வர் கூறியதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5.5 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10% பேருக்கு கூட வேலை வழங்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!