News October 8, 2024
பேச்சுவார்த்தையில் ஒரு தரப்புடன் உடன்பாடு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினருடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் சி.வி.கணேசன், த.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்களின் பிரதிநிதி குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், CITU சங்க நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாததால், அந்த தொழிற்சங்கம் மட்டும் வேலைநிறுத்தத்தை தொடர்கிறது.
Similar News
News December 12, 2025
BREAKING: விஜய் கட்சியின் சின்னம் உறுதியானது

தவெகவுக்கு ‘மோதிரம்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை கேட்டு தவெக ECI-ல் மனு கொடுத்திருந்தது. இந்நிலையில், மோதிரம் சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவிக்க உள்ளார். 2014, 2016 தேர்தல்களில் விசிக மோதிரம் சின்னத்தில் களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
5 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இந்தியா!

SA-வுக்கு எதிரான 2-வது T20-ல் இந்திய அணி 5 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. 157-வது ரன்னில் ஜிதேஷ் சர்மா, 158-வது ரன்னில் துபே, 162-வது ரன்னில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி & திலக் வர்மா ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். 213 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பமே முதலே தடுமாறியது. திலக் வர்மாவை தவிர, பேட்டிங்கில் அனைவருமே சொதப்பிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
News December 12, 2025
ரஜினியின் 2-வது தாயார்.. இவரை பற்றி தெரியுமா?

ரஜினி தாயாகவே பாவிப்பவரின் பெயர் ரெஜினா. 1979-ல் ரஜினி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியாத சூழலில், ‘அம்மா.. அம்மா’ என முனங்கியபடி அவர் தவித்துள்ளார். அப்போது, ரெஜினாவின் தாயன்பே அவரை குணப்படுத்தியுள்ளது. சமூக சேவகியான ரெஜினாவை ஷூட்டிங்கின் ஒன்றின் போது பார்த்த கணமே, ரஜினி அவரை ‘அம்மா’ என அழைத்துள்ளார். அன்றிலிந்து ரஜினிக்கு ரெஜினா 2-வது தாயாக மாறினார்.


