News April 5, 2025
டிஜிட்டல்மயம், பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம்!

கொழும்புவில் இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகேவை, பிரதமர் மோடி சந்தித்த நிலையில் இரு நாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், டிஜிட்டல் மயம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்தாகியுள்ளன.
Similar News
News April 9, 2025
BREAKING: குமரி அனந்தன் காலமானார்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார். 93 வயதான குமரி அனந்தன் வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். குமரி அனந்தன், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசையின் தந்தை என்பதும் குறிப்படத்தக்கது.
News April 9, 2025
LSG ஓனரை அட்டாக் செய்த பண்ட்?

KKR-க்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸின் போது, LSG-யின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என ரிஷப் பண்ட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறமாட்டேன் எனவும், தங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன் என பண்ட் பதிலளித்தார். LSG உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உடனான பிரச்னையால் தான், ஹேப்பியாக இல்லை என அவர் கூறியதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News April 9, 2025
கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம்.. சீமான் வலியுறுத்தல்

கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தேர்தலின்போது கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் அளிப்போம் என திமுக வாக்குறுதி அளித்து இருந்ததாக சீமான் கூறியுள்ளார். திமுக அரசின் ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ரூ.100 மானியம் அளித்து மக்கள் துயரத்தை போக்க வேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.