News August 4, 2024

இளையராஜாவுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க சம்மதம்

image

மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு, இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்க, சம்மதம் தெரிவித்துள்ளது. இளையராஜா இசையமைத்த குணா படத்தின் கண்மணி பாடல், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இடம் பெற்றிருந்தது. அனுமதி பெறாமல் இப்பாடலை பயன்படுத்தியதாக, படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், தற்போது ரூ.60 லட்சம் இழப்பீடு தர, படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 27, 2026

பிரேமலதா அதிர்ச்சி.. திமுக கூட்டணியில் பரபரப்பு

image

தேமுதிக கேட்கும் தொகுதிகளை திமுக தர மறுப்பதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 10 தொகுதிகளை கேட்டு பெற்ற நிலையில், அடுத்து அவை எந்த தொகுதிகள் என்ற பட்டியலை பிரேமலதா தொகுதி பங்கீடு குழுவிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கேட்கும் விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகளை திமுக கொடுக்க மறுத்துவிட்டதாம். ரிஷிவந்தியத்தில் போட்டியிட திட்டமிட்ட பிரேமலதா இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். <<-se>>#TNELECTION26<<>>

News March 27, 2026

போர் பதற்றம்.. பலனடையும் உள்நாட்டு சுற்றுலா துறை

image

விடுமுறைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்ட பயணிகளின் கவனம் தற்போது உள்நாட்டு சுற்றுலா மீதும் திரும்பி உள்ளது. மேற்காசிய போர் பதற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீர், லடாக், ஹிமாச்சல், சிம்லா, குலு, மணாலி, ஷில்லாங் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் சிரமங்களை சந்தித்தாலும், உள்நாட்டு சுற்றுலா துறை பரபரப்பாக இயங்கி வருகிறது.

News March 27, 2026

அதிமுக கூட்டணியில் தொடருமா புரட்சி பாரதம்?

image

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடருமா என்பது குறித்து இன்று தெரியவரும். 4 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில், நாங்கள் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்று என்று கூறிய அவர், கட்சியில் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!