News July 2, 2024
அக்னி வீர் திட்டம் ரத்து செய்யப்படும்: அகிலேஷ்

18ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனே அக்னி வீர் திட்டம் ரத்து செய்யப்படும் எனவும், நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலை கொடுக்க மனம் இல்லாததால் தான், அரசு வினாத்தாள்களை கசியவிடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
இன்று இரவு கணவன் மனைவி சேரக் கூடாதாம்

சூரிய கிரகணம் இன்று இரவு 10.59 முதல் நாளை அதிகாலை 3.23 வரை நிகழவுள்ளது. கிரகணம் நிகழும் பொழுது, கணவன்- மனைவி இணைய கூடாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றவர்களை விடவும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளிவரும் அதிகப்படியான கதிர்வீச்சு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமாம்.
News September 21, 2025
10வது படித்தால் போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

Airport Ground Staff மற்றும் Loaders பதவிகளுக்கு 1,446 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ₹35,000 வரை சம்பளம் வழங்கப்படுமாம். Airport Ground Staff பணிக்கு +2 முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு 18 – 30 வரை. Loaders பணிக்கு 10-வது தேர்ச்சி, வயது வரம்பு 20 – 40 வரை. 2 பதவிகளுக்கும் முன் அனுபவம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. <
News September 21, 2025
ஒரு ரூபாய் கூட இல்லாமல் உருவானது நாதக: சீமான்

மதம், சாதி, அரசியல், திரை கவர்ச்சி என்ற எந்த பின்புலமும் தனக்கு இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஒரு ரூபாய் கூட இல்லாமல், யாரிடமும் ஆதரவு கோராமல், மக்கள் சக்தியாக உருவெடுத்தது நாம் தமிழர் கட்சி என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு போராளிக்கு குடும்ப உறவை விட கொள்கை உறவே மேலானது என்பதை முன்னிறுத்தி, நாம் தமிழர் கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக திகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.